2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

அட்டாளைச்சேனை மாணவர்களுக்காக பற்சிகிச்சை நிலையம்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 05 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள மாணவர்களின் நலன் கருதி அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலையில் பற்சிகிச்சை நிலையம் இன்று வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படவுள்ளதாக அப்பாடசாலையின் பிரதி அதிபர் ஐ.எம்.பாஹிம் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் பற்சிகிச்சை நிலையம்  திறந்துவைக்கப்படவுள்ளது.
அட்டாளைச்சேனை, தைக்காநகர், சம்புநகர், ஆலங்குளம், மீலாத்நகர், பாலமுனை, திராய்க்கேணி ஆகிய பிரதேசங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்காக இந்த பற்சிகிச்சை நிலையம் திறந்துவைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம்.அப்துல் சலாம் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில்  பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன், மாவட்ட பற்சிகிச்சை வைத்தியர் டாக்டர் ஏ.எல்.லத்தீப் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X