Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை, இறக்காமம் விவசாயிகளிடமிருந்து அரசாங்க உத்தரவாத விலைக்கு நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை செவ்வாய்க்கிழமையிலிருந்து (04) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இறக்காமம் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
எனவே, அரசாங்கத்தினால் புதிதாக அமைக்கப்பட்ட நெற்களஞ்சியசாலையில் சிறுபோக நெல்லை விவசாயிகள் விற்பனை செய்யமுடியும். அந்த வகையில் ஒரு கிலோ சம்பா 50 ரூபாய்க்கும் ஒரு கிலோ நாடு நெல் 45 ரூபாய்க்கும் அரசாங்க உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்யப்படுவதுடன், விவசாயி ஒருவரிடமிருந்து இரண்டாயிரம் கிலோகிராம் நெல் கொள்வனவு செய்யப்படும் எனவும் நேற்று புதன்கிழமை அவர் கூறினார்.
14 சதவீதத்துக்கு குறைவான ஈரப்பதமும் ஒரு சதவீதத்துக்கு குறைவான பதரும் இருக்கவேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல் கொள்வனவு செய்யப்பட்ட விவசாயிகள், நெல் சந்தைப்படுத்தும் சபையினால் வழங்கப்படும் பற்றுச்சீட்டை மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் கிராமிய அபிவிருத்தி வங்கிகளில் சமர்ப்பித்து உடனடியாக பணத்தை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
4 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago