Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஓகஸ்ட் 08 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
ஏகாதிபத்தியத்தையும் பேரினவாதத்தையும் கட்டிக்கொண்டு அரியாசனத்தில் அமர்வதற்காக மஹிந்த ராஜபக்ஷ துடித்துக் கொண்டிருக்கின்றார். அதன்மூலம் சிறுபான்மையினரை அழித்து தன்னுடைய குடும்ப அரசியலை கொண்டு வருவதுக்கும் முயற்சிக்கின்றார் என அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.
கல்முனையிலுள்ள அவரது தேர்தல் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
மஹிந்தவின் ஆட்சிகாலத்தில், அவரது உறுதிமொழிக்கமைய சரணடைந்த போராளிகளுக்கு என்ன நடந்ததென நான் மஹிந்தவிடம் வினவ வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் அவரது இணைப்பாளராக இருந்து கொலை மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்ட இனியபாரதிக்கு தண்டணை பெற்றுக்கொடுக்க வேண்டும் போன்ற முக்கிய விடயங்கள் மேற்கொள்ளப்பட்வேண்டியுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே நாம் முக்கியமான தேர்தலை எதிர்க்கொண்டுள்ளோம். வாக்குகளை மக்களிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்காக வானூர்திகளில் அவர்களை அழைத்துச் சென்று சுற்றிக்காட்டுகின்றனர்.
இந்நடவடிக்கையானது முற்றிலும் தேர்தல் சட்டவிதிகளுக்கு எதிரானதாகும். அவர்களுக்கொரு சட்டம், எங்களுக்கொரு சட்டமா இந்த நாட்டில் நிலவுகின்றது.
மஹிந்தவின் ஆட்சியை மாற்றி மைத்திரியை கொண்டு வருவதற்காக அனைவரும் ஒன்றாக இணைந்து பாடுபட்டோம். மக்களின் தீர்ப்பும் அதுவாகவே அமைந்தது. ஆனால், இன்று எங்களுக்குள்ளே பிளவை ஏற்படுத்த இதுபோன்ற செயற்பாடுகள் அமைந்துள்ளதென அவர் குறிப்பிட்டார்.
4 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago