2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

த.தே.கூட்டமைப்புக்கு ஆலையடிவேம்பு பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 09 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

தமிழ்த் தேசியம், உணர்வு, ஒற்றுமை கருதி ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவதற்கு முடிவு எடுத்துள்ளதாக ஒன்றியத்தின் தலைவர் எஸ்.மோகன்ராஜ் தெரிவித்தார்.

இது தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டப் பட்டதாரிகள் நியாயமின்றி உண்மையிலேயே பாதிக்கப்பட்டுள்ளதை தான் ஏற்றுக்கொள்வதுடன்,  கடந்த காலத்தில் ஆளுமையுள்ள அரசியல் தலைமை அம்பாறை மாவட்டத்தில் இல்லாமல் போனமையை இதற்கு பிரதான காரணமாகும் என்று அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

மேலும், அமையவுள்ள ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக பலம் பொருந்திய அமைப்பாக மாற்றம் பெறவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலம் இவ்வாறான பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். அதற்காக முழுமூச்சுடன் செயற்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X