Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்த சிலர் கட்சியினூடாக பெறப்பட்ட நாடாளுமன்ற பிரதிநிதித்துவம், மாகாண சபை உறுப்பினர் பதவிகளுடன் வெளியேறிவிட்டு அமைச்சர்களாகி, பணபலம் பெற்று இன்று கட்சியையும் தலைமையையும் விமர்சித்து வருகினறனர் என வேட்பாளர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
சம்மாந்துறையில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற 'விழுமியங்களை காக்கும் விழுதுகள்'எனும் தொனிப்பொருளிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அழிப்பதற்காக வேண்டி முன்னாள் அமைச்சர்களான ரிஷாட் ஒரு பக்கமும் அதாவுல்லா மறுபக்கமும் இருந்துகொண்டு தங்களின் இருப்பை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் எமது சமூகத்தையும் காட்டிக் கொடுத்து எமது கட்சியையும் தலைமையையும் பற்றி மக்கள் மத்தியில் பொய் பிரசாரங்களை செய்து வருகின்றனர்.
இவர்கள் செய்துவரும் பொய்ப் பிரசார நடவடிக்கைகளுக்கு இளைஞர்களாகிய நீங்கள்தான் தக்க பதிலைக் கொடுத்து அவர்களை விரட்டியடிக்க வேண்டும் என்றார்.
4 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago