2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

கைகலப்பில் ஒருவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா,எஸ்.சபேசன்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு இடையில் செவ்வாய்க்கிழமை (11) இரவு ஏற்பட்ட கைகலப்பில் படுகாயமடைந்த ஒருவர் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆலையடிவேம்பைச் சேர்ந்த கந்தையா சிவநாதன் (வயது 35) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்திலேயே இந்த கைகலப்பு இடம்பெற்றது.

ஆதரவு திரட்டும் முகமாக வீடு, வீடாகச் சென்ற வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்களுக்கும் மற்றைய வேட்பாளாரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டு அது கைகலப்பதாக மாறியதாகவும் பொலிஸார் கூறினர்.   

இந்தச் கைகலப்புச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் நபர்களை பொலிஸார் தேடி வருவருடன், விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X