Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Administrator / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பி.எம்.எம்.ஏ.காதர்
மருதமுனை மண்ணுக்கு உதவிய முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவை வெற்றி பெறச் செய்வது காலத்தின் தேவையாகும் என தேசிய காங்கிரஸின் மருதமுனை அமைப்பாளர் ஐயூப் நியாஸ் தெரிவித்தார்.
மருதமுனை தேசிய காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆதரவாளர்களின் ஒன்று கூடலின்போது உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இத்தேர்தலில் யாரை நாம் தெரிவு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நாம் நன்றாகச் சிந்திக்க வேண்டிய தேவை இருக்கின்றது.கடந்த காலங்களில் எமது பிரதேசத்தில் நாடாளுமன்றம் சென்றவர்கள் எதையுமே செய்யாமல் மக்களை ஏமாற்றியிருக்கின்றார்கள்.
எக்காரணம் கொண்டும் மஹிந்தவை பிரதமராக்க மாட்டேன் என்று மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக உறுதிப்பட அறிவித்துள்ளார். இந்நிலையில்,வெற்றிலைக்கு வழங்கும் வாக்கு மஹிந்தவை பிரதமர் ஆக்கிவிடும் என்று ஐக்கிய தேசியக் கட்சியினர் பொய் பிரசாரங்களை செய்துவருகின்றனர்.
எனவே,தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா கடந்த 15 வருங்களாக மருதமுனை மண்ணுக்கு செய்த சேவைகளை மனதில் நிறுத்தி மனசாட்சியுடன் உங்கள் வாக்குகளை அதாவுல்லலாவுக்கு வழங்குங்கள் என்றார்.
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago