2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

நமது பலத்தை நிரூபித்து காட்டவேண்டும் :சிந்தாத்துரை ஜெகநாதன்

Administrator   / 2015 ஓகஸ்ட் 14 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு
 நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மூலம் தமிழ் மக்கள் ஒற்றுமைப்பட்டு வாக்களித்து நமது பலத்தை நிரூபித்தன் மூலம் புதிதாக அமைக்கப்படவுள்ள அரசாங்கத்தில் நமக்கான உரிமைகளை இலகுவில் பெற்றுக் கொள்ள முடியும் என அம்பாறை மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி சிந்தாத்துரை ஜெகநாதன் தெரிவித்தார்.
 

திருக்கோவில் பிரதேசத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
 
நமக்கானவற்றைப் பெற்றுக் கொள்ளும் முயற்சிகள் தொடரப்பட்டு வரும் சந்தர்ப்பமாக எதிர்வரும் பொதுத் தேர்தலை நாம் களமாக அமைக்க வேண்டும்.

இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து நமது பலத்தை நிரூபிப்பதன் மூலம் புதிய அரசாங்கத்தில் நமக்கானவற்றை சமரசப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பெற்றுக் கொள்ள முடியும்.

அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் அனுபவித்து வரும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கும் நமது இருப்பபை உறுதிப்படுத்துவதற்கும் புத்திஜீவிகளையும் மக்கள் சேவகர்களையும் தெரிவு செய்ய வேண்டியிருக்கின்றது.
 
சமஷ்டி முறையிலான ஆட்சி முறைமையின் கீழ்  தமிழ் மக்களுக்கு விமோசனத்தைப் பெற்றக் கொடுக்கும் வகையில் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு முயற்சித்துக் கொண்டிருக்கின்றது.

இவ்வாறான விடயங்களுக்கு நாம் ஆதரவை வழங்கி இத்தேர்தல் மூலம் பலம் பொருந்திய எண்ணிக்கையிலான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X