2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'போஷாக்கு நிறைந்த உணவுகளை பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும்'

Thipaan   / 2015 ஓகஸ்ட் 15 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

நாட்டில், ஆரோக்கியமான சிறந்த அறிவுத் திறனுடைய பிரஜைகளை உருவாக்குவதற்கு போஷாக்கு நிறைந்த உணவுகளை பிள்ளைகளுக்கு வழங்க வேண்டுமென கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஏ.எல். அலாவுதீன் தெரிவித்தார்.

குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு உணவூட்டல் மற்றும் உளவளத்துணை ஒருங்கிணைந்த பயிற்சி நெறியின் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்றது.

தாய் சேய் நல வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.சீ.எம். பஸால் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீங்கள் இங்கு பெற்றுள்ள பயிற்சிகளை நாளாந்த கடமைகளுடன் முன்னெடுத்து கடைப் பிடிப்பதன் மூலம் பிள்ளைகளின் உடல் நலத்தை பேண முடியும்.

பிள்ளைகளுக்கு எப்போதும் பிரதான உணவாக பழங்களை கொடுக்க வேண்டும். முறை கேடான உணவுகளை உண்பதன் மூலம் பிள்ளைகள் சிறந்த சுகதேகிகளாக வாழ முடியாத நிலைக்கு தள்ளப்படுவதோடு மற்றவர்களுக்கும் பெரும் சுமையை ஏற்படுத்த கூடியவர்களாக ஆகிவிடும்.

பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு உணவகங்களில் தயாரிக்கப்பட்ட உணவுகளை வழங்காமல் எமது வீட்டுத் தோட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட போஷாக்கான உணவுகளை காலை உணவாக வழங்க வேண்டும். அப்போதுதான் அநதப் பிள்ளை பாடசாலையில் ஆரோக்கியமான பிள்ளையாக காணப்படும்.

நாட்டில் சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கு நாம் எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ. இஸ்ஸதீன், டாக்டர் ஏ.ஆர்.எம். ஹரீஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X