Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஓகஸ்ட் 23 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
உல்லாசப் பயணிகள் விசாவில் வந்து சட்ட விரோதமாகத் தங்கியிருந்து விற்பனையிலும் மாந்திரீக வேலைகளிலும் ஈடுபட்ட இந்தியப் பிரஜைகள் நான்கு பேரைக் கைது செய்துள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை இரவு கல்முனையிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் தங்கியிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா பெங்கழூரைச் சேர்ந்த மகி அக்கபாளி (வயது 30), தானிக் நவீன்குமார் (வயது 22), அக்கபாளி தேவராஜ் பிரகல்லாதன் (வயது 33), ஆயக்குட்டு சிவகுமார் (வயது 31) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து இலங்கையில் விற்பனைக்கு அனுமதி பெறப்படாத ஒரு தொகை சட்டவிரோத விற்பனைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சிகை அலங்கார எண்ணெய் வகைகள், ஷம்பூக்கள், திராவகங்கள், உருத்திராட்ச வசிய மாந்திரீக அணிகலன்கள் என்று அவர்கள் கூறும் சில பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இந்தியர்கள் இரகசியமான முறையில் வீடுவீடாகச் சென்று பொருட்களை விற்பதிலும், வசிய மாந்திரீக வைத்திய முறைகளிலும் ஈடுபடுவதாக பொது மக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் கூறினர்.
கல்முனை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான அப்துல் கப்பாரின் நெறிப்படுத்தலில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைதான இந்திய பிரஜைகளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பொலிஸார் மேலும் கூறினர்.
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago