2025 மே 05, திங்கட்கிழமை

300 வீடுகளுடன் மாதிரி வீட்டுத்திட்டம்

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2019 பெப்ரவரி 03 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 300 வீடுகளைக் கொண்ட மாதிரிவீட்டுத் திட்டமொன்றை, வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சின் மூலம் மேற்கொள்ளவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல். நஸீர் தெரிவித்தார்.  

இவ்வீட்டுத் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி தலைமையில், பிரதேச செயலகத்தில் இன்று (03) நடைபெற்றது.  

இங்கு கருத்துத் தெரிவித்த நஸீர் எம்.பி, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் யுத்தத்தாலும் அனர்த்தங்களாலும் பாதிக்கப்பட்டு, வீடுகளின்றித் தொடா்ந்தும் கஷ்ட நிலையில் வாழ்ந்து வரும் மக்களின் நிலை குறித்து, அமைச்சர் சஜித் பிரேமதாஸவிடம் எடுத்துக் கூறியமைக்கு அமைய, இவ்வீட்டுத்திட்டத்தை அமைப்பதற்கு அவர் இணங்கியதாகத் தெரிவித்தார். 

இத்திட்டத்தை முழுமையாக மானிய அடிப்படையில் அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், சம்புநகர், அஷ்ரப் நகர் போன்ற பிரதேசங்களில் அமைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  

இதற்குத் தகுதியான வறிய மக்களை அடையாளம் கண்டு, அதற்கான காணிகளையும் அடையாளப்படுத்தி, அக்கிராமப் பிரிவுக்குப் பொறுப்பான கள உத்தியோகத்தர்கள், விரைவாகத் தரவுகள் அடங்கிய பெயர்ப் பட்டியலை வழங்குவதன் ஊடாக, இத்திட்டத்தை விரைவாக மக்களுக்கு வழங்க முடியுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X