2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

631 பட்டதாரிகளுக்கு நியமனம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

631  பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு, அம்பாறையில்  உள்ள ஹாடி உயர் தொழிநுட்ப கல்லூரியில் மாவட்டச் செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயகா தலைமையில் இன்று (01) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அனோமா கமகே கலந்துகொண்டு நியமனக் கடிதங்களை வழங்கினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர்,  கலாநிதி  எஸ்.எம்.இஸ்மாயில், அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களின்  செயலாளர்கள், பட்டதாரிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மும்மொழி மூல பட்டதாரிகளுக்கும் இன்றைய தினம் நியமனங்கள் வழங்கப்பட்டதுடன், நாளைய தினம் முதல் கடமையை பொறுப்பேற்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .