2021 ஜூன் 16, புதன்கிழமை

அரசின் ஊறுகாயாக ஹக்கீம் இருந்துகொண்டு த.தே.கூட்டமைப்பை விமர்சிக்கக் கூடாது

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 22 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம் காங்கிரஸை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊறுகாய் போன்று பாவிக்கக்கூடாது என்ற தொனியில் அமைச்சர் ஹக்கீம் கருத்து வெளியிட்டிருக்கிறார். பேச்சுக்கள் முக்கிய கட்டத்தை அடைந்து வருகின்ற தருணத்தில் முஸ்லிம் கட்சிகள் இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்து வருகின்றமை வழமை. ஆனாலும் அரசாங்கத்தின் ஊறுகாய்போன்று தான் இருந்து கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமைச்சர் ஹக்கீம் விமர்சித்திருப்பது அழகல்ல என்று - அரசியல் அலசல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் கருத்துத் தெரிவித்துள்ளார்.


அரசியல் அலசல் நிகழ்ச்சியின் முழு வீடியோ வடிவத்தினையும் இங்கே காணலாம்.


  Comments - 0

 • manzoora Sunday, 25 September 2011 04:54 AM

  ஹகீமின் பேச்சு யதார்த்தமானது. இதை புரியாத uudahaviyalalar தமிழ் மக்களை தவறான வழி நடாத்த முனைகிறார் பல விடயங்களை மறைத்து சொல்கிறார்.

  Reply : 0       0

  vaasahan Wednesday, 28 September 2011 05:47 PM

  இந்த உடகவியலாளர் கூட வெள்ளவத்தையில் கட்சி ஒன்றின் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினாரே. அப்படியிருக்க ஒரு சமூகத்தின் பெரும்பான்மையினர் அங்கீகரித்த ஒரு தலைவனை அதிலும் எப்போதும் தமிழர் போரட்டத்தை அங்கீகரிப்பதினால் பெரும்பான்மயிடமும் தன் மக்களிடமும் அதிருப்தியை சம்பாதித்த ஒருவருக்கு 'நடுநிலையான' ஊடகவியலாளர் அவரின் பாரம்பரியத்தின் அடிப்படையில் நன்றி செலுத்தியுள்ளார் என வாசகர்கள் கருதிக்கொள்ளலாம்.

  Reply : 0       0

  suddi Saturday, 01 October 2011 09:12 PM

  பக்கசார்பாகவே பேசும் ஊடகவியலாளர்கள் "எங்கே றஊப் ஹக்கீமின் ஊறுகாய் விடயம்" மக்களை கவர்ந்து விடுமோ என்கிற அச்சத்தினால் எதாவதை கூறி மழுப்பி திசை திருப்ப வேண்டும் என நினைக்கிறார்கள்.

  Reply : 0       0

  ruban Friday, 23 September 2011 04:48 AM

  அருமையான பேட்டி வித்தி, தொடரட்டும் உங்கள் பணி..

  Reply : 0       0

  mam.fowz Friday, 23 September 2011 10:34 AM

  உண்மை !! ஆனால் ஹக்கீம் அவர்களின் நிலை என்ன என்று தெரியாது ?

  Reply : 0       0

  vaasahan Friday, 23 September 2011 01:23 PM

  கஷ்டப்படும்போது கைகொடுப்பவனுக்கு கொடுக்கப்படக்கூடிய நல்ல தண்டனை என்று சிபாரிசு செய்யும் ஊடகவியலாளர் வாழ்க.

  Reply : 0       0

  Azmi Friday, 23 September 2011 02:33 PM

  ஊறுகாயை பற்றி இவர் பேசுகிறாறா?
  இவர் எந்த நேரம் எந்த கட்சியில் இருப்பார் என்று கடவுளுக்கு தான் தெரியும்.
  முஸ்லீம் மக்களை ஏமாற்றியே பிழைப்பு நடத்துபவர்கள் இவர்கள்.

  Reply : 0       0

  sarath Thursday, 29 September 2011 03:53 PM

  ஏன் தமிழர்கள் முஸ்லிம்களையும் சேர்த்துக்கொண்டு பேச்சுவார்த்தைக்கு போகக்கூடாது?

  Reply : 0       0

  sawaheer Friday, 23 September 2011 03:50 PM

  ஹகீம் நல்லவர்.

  Reply : 0       0

  Mohammed Hiraz Friday, 23 September 2011 04:17 PM

  யார் எதை சொன்னாலும் கிழக்கில் முஸ்லிம்களின் பலமே ஓங்கி உள்ளது. கிழக்கு முஸ்லிம்களின் உரிமைகள் உத்தரவாதபடுத்தப்படாதவரை பிரச்சினை தீரப் போவதே இல்லை!!! உரிமை கேட்போர் பிறர் உரிமையை மதிக்காதவரை தங்கள் உரிமை கிடைக்க போவதில்லை!!!

  Reply : 0       0

  koneswaransaro Friday, 23 September 2011 04:24 PM

  எப்போது காலம் கனியும் என்று தெரிகிறதோ அப்போதெல்லாம் முஸ்லிம் தலைவர்கள் இப்படித்தானே நடந்து கொள்கிறார்கள்.

  Reply : 0       0

  risad Friday, 23 September 2011 06:08 PM

  முஸ்லிம்கள் தனி தரப்பாகத்தான் செல்ல வேண்டும்

  Reply : 0       0

  kuhan Friday, 23 September 2011 07:16 PM

  சரியான பதிலடி.

  Reply : 0       0

  ஓட்டமாவடி ஜெமீல் Friday, 23 September 2011 10:35 PM

  ரவூப் கக்கீம் முஸ்லிம்களின் ஏக பிரதிநித அல்ல என்பதை அனைவரும் புரிந்தகொள்ள வேண்டும். இலங்கையில் முஸ்லிம்களின் செல்வாக்குள்ள பல கட்சிகள் உள்ளன. அதிலும் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பல கிளைகளாக பிரிந்து நிற்கும் கட்சிகள்கூட மக்கள் செல்வாக்குப்பெற்றுக் காணப்படுகின்றன. ஒரு கட்சியையே ஒழுங்காக வைத்துப் பராமரிக்கத் தெரியாத ஊறுகாய்கள் முஸ்லிம்கள் நலனில் எந்தளவு உண்மையான விசுவாசத்துடன் நடந்துகொள்வர் என்பது கேள்விக்குறியே?

  Reply : 0       0

  Abuumarah Friday, 23 September 2011 10:47 PM

  எல்லா மக்களும் நிம்மதியாக வாழ வேண்டுமானால் சமாதானக் காற்றை எல்லோரும் அனுபவிக்க வேண்டும் என்பதையும் சகல மக்களும் கௌரவத்துடன் மதிக்கப்பட வேண்டும் என்பதை சகல தமிழ் அரசியல்வாதிகளும் சமூகத் தலைவா்களும் உணர வேண்டும்.

  Reply : 0       0

  siraj Saturday, 24 September 2011 03:46 AM

  சந்தர்ப்பவாதம் பார்த்து தலைகாட்டும் காக்கை கூட்டமாக இருக்காமல் பொது நலமுடன் மனிதநேயத்துடன் பேச வேண்டும்.
  ரவூப் ஹக்கீம் இல்லை என்றால் இப்ப இருக்கும் முஸ்லீம் தலைமத்துவம் எல்லாம் வெறும் ஓட்டை வாளியாகத்தான் இருக்கிறார்கள் இருப்பார்கள்.
  எனவே, ரவூப் ஹக்கீம் சரியான முறையில்தான் பேசியிருக்கிறார்.
  ஏன் என்றால் இதற்கு முதல் ரவூப் ஹக்கீம் எந்தச்சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்களை ஒதுக்கி பேச வில்லை. ஆனால் இங்க பேசுபவருக்கு அவ்வளவுதான் என்று விளங்குது எனவே சிந்தித்து செயல் படவும்.
  ஒற்றுமை வேண்டும் எல்லாத்திலும்.

  Reply : 0       0

  shifardeen Saturday, 24 September 2011 08:55 PM

  ஹகீம் வோர்ட் ஓகே.

  Reply : 0       0

  Saleem Saturday, 24 September 2011 09:05 PM

  ஹக்கீம் நல்லவர்தான், இப்போ அவர் முஸ்லீம்களுக்காக பேசுகிறாரா அல்லது இந்த அரசாங்கத்துக்காக பேசுகிறாரா என்பது தெரியவில்லை.
  ஏனெனில், இப்போ அவர் ஒரு மந்திரி. முஸ்லிங்களின் பிரச்சினையை முக்கியமாக வேண்டுமென்றால் அவர் அரசாங்கத்தில் இருந்து விலகி முஸ்லிம் பிரதிநிதியாக அரசாங்கத்துடன் பேசிவதுதான் சிறந்தது.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .