Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
R.Tharaniya / 2025 ஜூலை 09 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள கூடுதல் வரி விதிப்புகளுக்கு பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு தன்னுடைய கவலையைத் தெரித்துள்ளது.
எனினும், கூடுதல் வரி விதிக்கும் நாடுகளின் பட்டியலை ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக அறிவித்த சில மணி நேரங்களில், மேலும் 12 நாடுகளின் பட்டியல் வெளியானது.
மியன்மார், தென்னாபிரிக்கா, மலேசியா, வங்கதேசம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் வரி உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் இலங்கையின் பெயர் இல்லை. எனினும், இலங்கையின் பெயர் உள்ளடக்கப்படுமாயின், இலங்கையின் ஆடைத்தொழிற்றுறை கடுமையாகப் பாதிக்கும் என்றும், பல தொழிற்சாலைகளை மூடவேண்டிய நிலைமை ஏற்படும்.
தொழிற்வாய்ப்பு இல்லாமல் போகும். பிரச்சினைகள் அதிகரிக்கும் என எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டிவருகின்றது.
எனினும், இந்த கூடுதல் வரி விதிப்பு இலங்கைக்கு மட்டுமே விதிக்கப்பட்டது ஒன்றல்ல பல நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள ஆளும் தரப்பினர், பேச்சுவார்த்தையின் ஊடாக நல்ல தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள முடியுமென நம்பிக்கை தெரிவித்துள்ளன.
எனினும், இன்னும் குறுகிய காலமே இருக்கின்றது என்பதை நினைவில் வைத்துக்கொள்வது அவசியம்.
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகள் பெரும் கவலைகளை ஏற்படுத்தி இருப்பதாகவும், பொருளாதார ரீதியில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதாகவும் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
எனினும், இந்த விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் பெயர் குறிப்பிடாமல் தவிர்க்கப்பட்டது கவனிக்கத்தக்கது.
பிரிக்ஸ் கூட்டமைப்பு 2009இல் தொடங்கப்பட்டது. இதில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
பிரிக்ஸ் கூட்டமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு பிரேசிலின் ரியோ டிஜெனிரோ நகரில் ஞாயிற்றுக்கிழமை (06) ஆரம்பமானது.
ஒரு நாடு, உலகத்தோடு இணையாமல் வாழமுடியாது. ஏனைய நாடுகளுக்கு அமெரிக்க விதிக்கும் கூடுதல் வரியினால், அந்த நாடுகள் எம்மைப்போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் மீது வரிகளைக் கூட்டி விதிக்கக் கூடும்.
இதனால், எமது ஏற்றுமதி, இறக்குமதி துறைகள் பாதிக்கப்படையலாம் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
ஆகையால், நமது நாட்டின் ஆடைத்தொழிற்துறையையும், அதில் தங்கிவாழும் குடும்பத்தினரையும் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துடையது.
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு தொடர்பில் அமெரிக்காவுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ள வழிசமைக்க வேண்டும்.
இல்லையேல் தொழிலை இழந்துபலரும் நடுத்தெருவில் நிற்கவேண்டிய நிலைமை ஏற்படும். இது ஏனைய துறைகளின் மீதும் கடுமையான தாக்கத்தை செலுத்தும் என்பதையும் நினைவில் கொள்க.
கூடுதல் வரி விதிப்பு தொடர்பில், அமெரிக்காவுடன் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தை வெற்றியடையவேண்டும்.
இல்லையேல் தொழில்களை இழந்து வீதிக்கு இழுத்து வீசப்படுவோர், சாதாரண தொழில்களைத் தேடுவர், அவர்களைக் குறைந்த சம்பளத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டால், ஏனைய தொழிலாளர்களும் பெரும் அசௌங்கரியங்களுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்படும்
09/07/2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago