2024 நவம்பர் 02, சனிக்கிழமை

தூய்மையில் அக்கறை காட்டாவிடின் நாடே முடங்கிவிடும்

Janu   / 2024 ஒக்டோபர் 23 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்னடா, கேள்வி படாத நோய்களை எல்லாம் கேள்விப்பட வேண்டி இருக்கிறது என பலரும் கூறி திரிகின்றனர். அந்தளவுக்கு நோய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்​டே செல்கின்றது. ஒருபுரம் டெங்கு நுளம்புவின் தாக்கம் அதிகரிக்கும் அதேநேரத்தில், பன்றிக்காய்ச்சல் தொடர்பிலான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் உள்ளவர்கள் மிக அழகான ஆடைகளை அணிந்துகொண்டு, கூந்தலுக்கு ஜெல் பூசி, அழகு திட்டங்களை பின்பற்றுகிறார்கள், ஆனால் தூய்மை பற்றி சிந்திப்பதில்லை. தூய்மையில் அக்கறை காட்டாவிடின் நாடே முடங்கிவிடும். இதற்கு கொரோனா காலக்கட்டத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

1870களில், ஜப்பானில் பன்றிப் பண்ணை நடத்தி வந்த சுண்டா சுகாரிக்கு திடீரென கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. மிகக் குறுகிய காலத்தில், இந்த காய்ச்சல் ஜப்பானின் ஒரு பெரிய பகுதியில் பரவியது. முதல் காய்ச்சல் நோயாளி சில நாட்களில் இறந்துவிட்டார் மற்றும் குணமடைந்தவர்கள் நிரந்தர நரம்பியல் நோயாளிகள் ஆனார்கள். இந்த நோயை பரிசோதித்த மருத்துவர்கள், இது ஆபத்தான பக்டீரியாவால் ஏற்படுவதாக முடிவு செய்து, இந்த நோய்க்கு ஜப்பானிய மூளையழற்சி என்று பெயரிட்டுள்ளனர்.

பன்றிக்காய்ச்சல் என்று அழைக்கப்படும் இந்நோய், பன்றிகளிடமிருந்து மட்டுமல்லாது பல விலங்குகளுக்கும் பரவுகிறது, மேலும் அந்த விலங்குகளின் இரத்தத்தை உண்ணும் நுளம்புகள் மூலம் இது மனிதர்களுக்கு பரவுகிறது. இலங்கை முழுவதும் பன்றிக் காய்ச்சல் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 25% பேர் இறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வைரஸ் இரண்டு முதல் 26 நாட்கள் வரை உடலில் இருப்பதால், நரம்புகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பன்றிக்காய்ச்சல் நேரடியாக மூளையை பாதிக்கிறது. நோய் தாக்கிய உடனேயே அறிகுறிகள் தென்படுவதில்லை. ஆனால் சில நாட்களுக்குப் பிறகு, நோயாளி கடுமையான காய்ச்சல் ஏற்படும், மேலும் மூளை பாதிக்கப்படத் தொடங்குகிறது. இதனால் முதலில் லேசான தலைவலியும், பிறகு வாந்தி, காய்ச்சல், வலிப்பு போன்றவையும் ஏற்படும்.

இந்த அறிகுறிகள் நோய் தொடங்கிய 5 முதல் 15 நாட்களுக்குள் தோன்றும்.  இலங்கை அழுக்கு பன்றி பண்ணைகள் மற்றும் பிற அழுக்கு கழிவுநீர் நிறைந்த நாடு. பன்றி பண்ணைகளில், கழிவுகள் மற்றும் பிற கழிவுகள் மொத்தமாக வயல்களில் விடப்படுகின்றன.

 இந்த நெற்பயிர்களை சுற்றி நுளம்புகள் பரவி நோய் பரவுகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், பன்றியின் ரத்தத்தை உண்ணும் நுளம்புகளுக்கு நோய் தொற்று ஏற்படாது. நுளம்பு இயற்கையால் உருவாக்கப்பட்ட ஒரு ஆபத்தான காரணி. மனிதனின் கையால் அடிபட்டு இறந்தால் தவிர வேறு எந்த வகையிலும் நோய் வராது.

ஜப்பானிய மூளை அழற்சிக்கு தடுப்பூசி உள்ளது. இது இலங்கையில் எந்தளவுக்கு பயன்படுத்தப்படுகிறது என்று தெரியவில்லை. இந்நாட்டில் இந்நோயைக் கட்டுப்படுத்த நிரந்தர வேலைத்திட்டம் உள்ளதா என்றும் தெரியவில்லை. பன்றிக் காய்ச்சலைத் தடுக்க தடுப்பூசி இருப்பது பலருக்குத் தெரியாது. அரசு மருத்துவமனைகளில் இதை பெற முடியுமா என்பது பலருக்கு தெரியாது. பன்றிக்காய்ச்சல் நரம்பு மண்டலத்தை நேரடியாகப் பாதிப்பதால் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.

கொ​ரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பிலான முன் அனுபவம் இன்மையால், நாட்டை வருடகணக்கில் முடக்கிவைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது. இதனால், பொருளாதாரம் பாதிக்கப்பட்டு, மக்கள் கடுமையான சிரமங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர். ஆகையால், வருமுன் காக்கும் வகையில் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ப​தே எமது அவதானிப்பாகும்.

23.10.2024


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .