Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஒக்டோபர் 12 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் தற்போதைய சூழ்நிலை மற்றும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, மன நலனுக்கான சமூக கவனம் முன்னெப்போதையும்
விட அதிகமாக இருக்க வேண்டும். அதனை உலக மனநல தினமான ஒக்டோபர் 10 ஆம் திகதியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
உலக சுகாதார அமைப்பு (WHO) ஒவ்வொரு ஆண்டும் உலக மனநல தினத்திற்கான உலகளாவிய பிரசாரத்தை 2013 முதல் முன்னெடுத்து வருகிறது. உலக மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளவில் மனநலப் பிரச்சினைகளை அனுபவிப்பவர்களுக்கு ஆதரவளிக்கும் முயற்சிகளைத் திரட்டவும் இந்த பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றன.
கொரோனா தொற்றுநோய்க்கு முன்பு, உலகளவில் எட்டு பேரில் ஒருவர் மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், மனநலத்திற்கான சேவைகள், திறன்கள் மற்றும் நிதி பற்றாக்குறை உள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் கொடுமைப்படுத்துதலுக்கு ஆளாகிறார்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள் மற்றும் தன்னுயிரை மாய்த்துக்கொள்கின்றார்கள்.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் 700,000க்கும் மேற்பட்டோர் தன்னுயிரை மாய்த்துக்கொள்கின்றனர். தன்னுயிரை மாய்த்துக்கொள்வதற்கு முயற்சிப்பவர்கள் அதிகம். 15-29 வயதுடைய இளைஞர்களிடையே மரணத்திற்கு நான்காவது முக்கிய காரணம்
தன்னுயிரை மாய்த்தலாகும். உலகளாவிய தன்னுயிரை மாய்த்துக்கொள்ளுதலில் 77% குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் நிகழ்கின்றன.
மோதல், பேரழிவு, வன்முறை, துஷ்பிரயோகம் அல்லது இழப்பு மற்றும் தனிமை உணர்வுகள் தன்னுயிரை மாய்த்துக்கொள்ளல் நடத்தையுடன் வலுவாகத் தொடர்புடையவை. உலகளவில் மனச்சோர்வு என்பது ஒரு பொதுவான நோயாகும், இது உலக மக்கள்தொகையில் 3.8% பேரைப் பாதிக்கிறது. இவர்களில், 5.0% பேர் பெரியவர்கள் மற்றும் 5.7% பேர் 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள். உலகளவில் சுமார் 280 மில்லியன் மக்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
இது வேலை, பாடசாலை மற்றும் குடும்பத்தில் குறிப்பிடத்தக்க துயரத்தையும் மோசமான செயல்பாட்டையும் ஏற்படுத்தும். மிக மோசமான சந்தர்ப்பங்களில், மனச்சோர்வு தன்னுயிரை மாய்த்துக் கொள்வதற்கும் வழிவகுக்கும்.
மனநோய்க்கு அறியப்பட்ட, பயனுள்ள சிகிச்சைகள் இருந்தாலும், குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் 75%க்கும் அதிகமான மக்கள் சிகிச்சை பெறுவதில்லை.
பயனுள்ள பராமரிப்புக்கான தடைகளில் வளங்களின் பற்றாக்குறை, பயிற்சி பெற்ற சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்கள் இல்லாமை மற்றும் மனநலக் கோளாறுகளுடன் தொடர்புடைய சமூக களங்கம் ஆகியவை அடங்கும்.
நாட்டின் மக்கள் தொகையில் 10% பேர் பல்வேறு மனநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2% பேர் கடுமையான மனநலப் பிரச்சினைகளில் உள்ளனர்.
2024ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 37,000 நோயாளிகள் மனநல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாகவும், மனநல நோய்களும் தன்னுயிரைமாய்த்துக்கொள்வதற்கு ஒரு காரணம் அவசர காலங்களில் வழங்கப்படும் மனநல சேவைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
20 minute ago
28 minute ago
29 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
28 minute ago
29 minute ago
35 minute ago