Mayu / 2024 மே 06 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தின் ஆரம்ப உற்சவமான பாக்குத்தெண்டல் உற்சவம் திங்கட்கிழமை (06) அதிகாலை சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

பாரம்பரிய வரலாற்று தொன்மைமிக்க தெய்வமான வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்வை ஆலயத்துடன் தொடர்புடைய வீடுகளுக்கு சென்று தெரிவிக்கும் சம்பிரதாய உற்சவமாக இந்த பாக்குத்தெண்டல் உற்சவம் அமைந்துள்ளது

பாக்குத்தெண்டல் நடைபெற்று ஏழாவது நாளில் முல்லைத்தீவு பெருங்கடலில் தீர்த்தம் எடுத்து வந்து காட்டாவிநாயகர் ஆலயத்தில் அம்மன் சன்நிதானத்தில் உப்புநீரில் விளக்கேற்றி கண்ணகி அம்மனின் பொங்கல் ஆரம்பமாகும்.

அந்த வகையில் எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட் கிழமை கடல்நீர் தீர்த்தம் எடுத்தல் நிகழ்வும் அதனை தொடர்ந்து ஏழுநாட்கள் முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயத்தில் அம்மன் சன்நிதானத்தில் உப்பு நீரில் விளக்கெரியும் அற்புத நிகழ்வு இடம்பெற்று எதிர்வரும் 19 ஆம் திகதி காட்டாவிநாயகர் ஆலய பொங்கல் உற்சவம் இடம்பெற்று 20 ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



8 minute ago
50 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
50 minute ago
50 minute ago
2 hours ago