2024 ஜூலை 27, சனிக்கிழமை

வருடாந்த தேர் திருவிழா

Janu   / 2024 ஜூன் 10 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா இஸ்கிராப் தோட்டத்தில் வரம் அருளும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழா கடந்த (07) ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

சனிக்கிழமை (08)  அன்று புண்ணிய வாசகம் கிரிகையுடன் பால்குட பவனி நடைபெற்று பிற்பகல் மகேஸ்வர பூஜையுடன் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது .

தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை  (09) அன்று சிறப்பு அபிஷேகம் இடம்பெற்று திருவிளக்கு பூஜை மற்றும் வசந்த மண்டப பூஜை  நடைபெற்று தீப ஆராதனை இடம்பெற்று மேள வாத்தியங்களுடன் உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்படட தேரில் விநாயகப் பெருமான், முருகப் பெருமான், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆகிய மூன்று தெய்வங்களின் வெளி வீதியூடாக நுவரெலியா பிரதான நகரை தேரேறி வலம் வந்ததது.

அதனை தொடர்ந்து திங்கட்கிழமை (10) பச்சை சாத்துதல் மாலை மாவிளக்கு பூஜையுடன் பூங்காவன பூஜை நடைபெற்றது .

எதிர்வரும் (11) செவ்வாய்க்கிழமை தீர்த்த உற்சவமும்  கரகம் வீதி உலா என்பன நடைபெற்று கொடி இரக்கத்துடன் விழா நிறைவுபெறும்.

செ.திவாகரன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .