A.K.M. Ramzy / 2020 நவம்பர் 25 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஹமது படேலின் மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் எம்.பி. அஹமது படேல்(71) கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குணம் அடைந்தாலும், கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் அஹமது படேல் கடுமையாக பாதிக்கப்பட்டார்.
அவரது நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், குர்கோவனில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் கடந்த 14 ஆம் திகதி அஹமது படேல் சிகிச்சைக்காக திடீரென அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஹமது படேலின் மறைவு, காங்கிரஸ் கட்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் செய்தியில், “இது ஒரு சோகமான நாள். அஹமது படேல், காங்கிரஸ் கட்சியின் தூணாக விளங்கினார்.
சோதனையான காலங்களில் கட்சியுடன் இணைந்து செயலாற்றியவர். காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய சொத்தாக விளங்கிய அஹமதி படேல் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பிரியங்கா காந்தி இரங்கல் செய்தியில், “அஹமது படேல் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர் மட்டுமல்ல, எனக்கு அப்போது நல்ல ஆலோசனைகள் வழங்கக் கூடிய நண்பராகவும் விளங்கினார்" என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் செய்தியில்;-
“அஹமது படேல் அவர்களின் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். தனது கூர்மையான அறிவுக்காக போற்றப்பட்டவர். அவரது மகனிடம் பேசி எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தேன் ” என்று தெரிவித்துள்ளார்.
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
2 hours ago