2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஆவி பறக்க திடீரென வெளியேறிய தண்ணீர்

Freelancer   / 2023 ஒக்டோபர் 24 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ரயில் நிலையம் செல்லும் வீதியோரத்தில் திங்கட்கிழமை (23) திடீரென்று ஊற்று ஏற்பட்டு அதில் தண்ணீர் வெள்ளை நிறமாக வந்துள்ளது.

வீதியோரம் வெள்ளை நிறத்தில் பால் போன்று தண்ணீர் வெளியேறியதை அந்தப் பகுதியில் நடந்து சென்ற பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.

ஒரு சிலர் அருகில் சென்று ஆவிபறக்க வந்த தண்ணீரை கையில் அள்ளி பருகினர். அந்த தண்ணீரில் உப்புத்தன்மை இல்லாமலும், பால்போன்று வெள்ளை நிறத்தில் இருந்ததாகவும் கூறினர். அதில் சிலர் பால் போன்று இருந்ததால் அந்த தண்ணீரை கையில்   எடுத்து தலையில் தெளித்தும் கொண்டனர்.

மேலும் இதுதொடர்பாக உடனடியாக மாநகராட்சி ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் விரைந்து வந்து அந்த தண்ணீரை போத்தலில் எடுத்து ஆய்வு செய்வதற்காக கொண்டு சென்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X