2025 ஜனவரி 25, சனிக்கிழமை

உயிரிழப்பு ஏற்பட்ட இடத்தில் டோக்கன் விநியோகிக்கும் பணி ஆரம்பம்

Freelancer   / 2025 ஜனவரி 09 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருப்பதியில் கூட்ட நெரிசலால் உயிரிழப்பு ஏற்பட்ட இடத்தில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்க வாசல் வழியாக ஏழுமலையானை தரிசிப்பதற்கான இலவச தரிசன டோக்கன் விநியோகிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை (8) இரவு, கூட்ட நெரிசல் ஏற்பட்ட விஷ்ணு நிவாசம் பகுதியில் பக்தர்களுக்கு டிக்கெட் விநியோகிக்கப்பட்டது. வரிசையில் ஒருவர் பின் ஒருவராக பக்தர்கள் வருவதை அதிகாரிகள் உறுதி செய்தனர். மேலும், பக்தர்களின் வருகையை ஒழுங்குபடுத்தவும், கூட்ட நெரிசலைத் தடுக்கவும் முறையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

 திருமலை ஏழுமலையான் கோயிலில், 10ஆம் திகதி, சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, 19ஆம் திகதி வரை பக்தர்கள் அதன் வழியே தரிசனத்துக்காக அனுமதிக்கப்படவுள்ளனர். 

வைகுண்ட ஏகாதசிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் போர்க்கால அடிப்படையில் தேவஸ்தான நிர்வாகம் செய்துள்ளது. இந்தச் சூழலில் சொர்க்க வாசல் தரிசனத்தில் சாமானியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திருப்பதியில் 8 இடங்களில் 90 கவுண்டர் மையங்கள் அமைத்து 9ஆம் திகதி அதிகாலை 5.30 மணி முதல் தர்ம தரிசனத்துக்கான டோக்கன்கள் விநியோகம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தது.

இந்த சூழலில், புதன்கிழமை(8) இரவு, தரிசன டிக்கெட்டை பெற ஆயிரக்கணக்கான பக்தர்கள் கவுண்டர்களில் திரண்டிருந்தனர். அப்போது விஷ்ணு நிவாசம், பைரகிபட்டேடா, ராமச்சந்திர புஷ்கரிணி உள்ளிட்ட கவுண்டர்களில் கூட்டம் அதிகம் இருந்தது. அந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக இருக்கவில்லை.

 இந்த நிலையில், அங்கு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். சுமேலும், மார் 30க்கும் மேற்பட்டோருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காயமடைந்தவகள் திருப்பதியில் உள்ள அரசு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X