A.K.M. Ramzy / 2021 மார்ச் 17 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி,
ஊரடங்கு நடவடிக்கை என்பது மிகக் குறைந்த தாக்கத்தைத் தான் ஏற்படுத்தும். பரவலின் அளவையும் ஓரளவுக்குத்தான் குறைக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது.
கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மத்திய குழுவினர் மராட்டியம் வந்திருந்தனர். அந்த குழுவினர் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் மாநில அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயையும் சந்தித்து பேசினர்.
இதையடுத்து அந்த குழுவினர் மத்திய அரசுக்கு சமர்ப்பித்த அறிக்கையில் மராட்டியத்தில் கொரோனா 2ஆவது அலை தொடக்கத்தில் இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.
அந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அசோக் பூஷன், மராட்டிய அரசின் தலைமை செயலாளர் சீத்தாராம் குந்தேக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் பரவலின் 2ஆவது கட்ட அலை மராட்டியத்தில் தொடக்கத்தில் உள்ளது. எனவே கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பாதிக்கப்பட்டவர்களை கண்காணித்தல், பரிசோதனையைத் தீவிரப்படுத்துதல், பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்துதல், தனிமைப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணித்தல் ஆகிய நடவடிக்கைகள் குறைவாக இருக்கின்றன.
கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் மக்களுக்கு இடையே கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் குறைவாக இருக்கிறது. தற்போது மராட்டியத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அதன் மூலம் 20 பேருக்கு மேல் பரவக்கூடிய நிலை இருக்கிறது. எனவே ஒருவருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டால் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் 20 முதல் 30 பேரை கண்டறிய வேண்டும்.
தொற்று பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். வீடு, வீடாகவும், கட்டுப்பாட்டு பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு அவசியம். முன்களப் பணியாளர்கள் தேவையை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்த வேண்டும்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago