2021 ஒக்டோபர் 28, வியாழக்கிழமை

ஊராட்சி மன்றத் தலைவராக 90 வயது மூதாட்டி !

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 13 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஊராட்சித் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 90 வயது மூதாட்டி ஒருவர் ஊராட்சி மன்றத் தலைவரானது உள்ளிட்ட சுவாரஸ்ய சம்பவங்கள் நடந்துள்ளன.

தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சில் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சில்களில் பெரும்பான்மை இடங்களை ஆளும் திமுக கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது.

பாளையங்கோட்டை யூனியன் சிவந்திபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தலில் 90 வயது நிரம்பிய மூதாட்டி பெருமாத்தாள் போட்டியிட்டார். பெருமாத்தாள் 1,558 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட செல்வராணி, உமா ஆகியோர் கட்டுப்பணத்தை இழந்தனர். வெற்றி பெற்ற பெருமாத்தாள் தனது முதுமை மிளிரும் சிரிப்புடன் வெற்றிச் சான்றிதழைப் பெற்றுச் சென்றார். அவருக்கு கூடியிருந்த அனைவரும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .