2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

எப்போது இலவச கொரோனா தடுப்பூசி கிடைக்கும்?

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 05 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

புது டில்லி:

ஒவ்வொரு இந்தியருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பி யுள்ளார். இதுகுறித்து அவர்  நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட டுவிட்டரில் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

"ஒவ்வொரு இந்தியருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும். இதற்கான தெளிவான பதிலை பிரதமர் நரேந்திர மோடி கட்டாயம் தெரிவிப்பாரா? என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என அந்தப் பதிவில் ராகுல் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா பரவலின் தாக்கம் எந்த அளவுக்கு உள்ளது மற்றும் அதற்கான தடுப்பூசியை கொண்டு சேர்ப்பதில் உள்ள சவால்கள் குறித்து ஆராய அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு நடத்தியுள்ள நிலையில், ராகுல்காந்தி  இந்த கேள்வியை மோடியிடம் எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .