Ilango Bharathy / 2022 நவம்பர் 24 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மையில் காசியில் தமிழ் சங்கமம் நடத்தப்பட்டது. இதில் இந்தியப் பிரதமர் மோடி, இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் போது உரையாற்றிய இளையராஜா காசியில் தமிழ் சங்கமம் நடத்தியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த 20 ஆம் திகதி நடிகையும், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக நிர்வாகியுமான குஷ்பூ டுவிட்டரில் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் ”இன்று உலகளவில் தமிழ் மொழியை அறியச் செய்ததற்கும், தமிழருக்கு கிடைக்கும் மரியாதைக்கும், தமிழ் கலாச்சாரம் இரு மடங்கு உயர்ந்துள்ளதற்கும் முக்கிய காரணம் பிரதமர் மோடி தான் என்றும், இதற்கு நாங்கள் எப்போதும் கடமைப்பட்டுள்ளோம். உங்களை பின்பற்றுபவர்களாக அல்ல, ஒரு தமிழனாக” எனக் கூறி, மிக்க நன்றி! தமில் வாழ்க, தமில் மொழி வாழ்க!” என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த பதிவில் ‘தமிழ்‘ என்பதற்குப் பதிலாக ‘தமில்‘ என குஷ்பு குறிப்பிட்டிருந்ததைக் கவனித்த பலரும், குஷ்பூ மற்றும், பாஜகவினர் தொடர்ந்து தமிழைப் புறக்கணித்து வருவதாகக் குற்றம் சாட்டினர்.

இதனையடுத்து தனது தவறை அறிந்த குஷ்பூ மீண்டும் ஒரு டுவிட்டில் அதை சரி செய்து, மன்னிப்பு கேட்டிருந்தார். எனினும் மன்னிப்பு என்ற வார்த்தையிலும் எழுத்துப்பிழை இருந்ததால் அவரை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
9 hours ago
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Dec 2025
15 Dec 2025