Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2025 ஜூலை 28 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் அரச வைத்தியசாலைகளுக்குச் சென்றால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுமென்பதாலேயே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனியார் வைத்தியசாலைக்குச் சென்றார்" என அமைச்சர் இந்தியாவின் தமிழ்நாட்டின் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போதே குறித்த கருத்தை சுப்ரமணியன் வெளிப்படுத்தியிருந்தார். மேலும் கருத்துத் தெரிவித்த சுப்ரமணியன், “ஆளுநர் தமிழிசை இரண்டு மாநிலங்களில் ஆளுநராக இருந்தவர். தமிழிசைக்கு அரச மருத்துவமனை எப்படி செயல்படும் என்று தெரியும். சமீபத்தில், பாதுகாப்பு துறை அமைச்சரின் மனைவி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்றார். பிரதமர் சகோதரர் கூட தனியார் மருத்துவமனையில் தமிழகத்தில் சிகிச்சை பெற்றார்.
அரசு மருத்துவமனைகளின் தரம் மிக சிறப்பாக இருக்கிறது. அரசு மருத்துவ சேவை, தனியார் மருத்துவ சேவை என பிரித்து பார்க்க கூடாது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது” என்றார்.
முன்னதாக, தமிழக பாரதிய ஜனதாக் கட்சியின் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “தமிழகத்தில் முதல்வர் உட்பட நம்பிக்கையுடன் சென்று சிகிச்சை பெறும் அளவுக்கு அரசு மருத்துவமனைகள் இல்லையே என்பதுதான் எனது ஆதங்கம். கோடீஸ்வரர்களுக்கு கிடைக்கும் சிகிச்சை, கோடியில் வாடிக் கொண்டிருக்கும் சாமானியனுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எனது ஆதங்கம். புதுச்சேரியில் தடுப்பூசி போடப்பட்டபோது கூட, அதை அரசு மருத்துவமனைக்குச் சென்றுதான் நான் போட்டுக் கொண்டேன். அந்த நிலை தமிழகத்தில் ஏன் இல்லை என்றுதான் எனது ஆதங்கம்.
ஏழையின் இதயத்துக்கு கிடைக்க வேண்டிய பாதுகாப்பு அரசு மருத்துவமனையில் கிடைக்கவில்லை. அதை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே முதல்வரும் செல்லும் அளவுக்கு அரசு மருத்துவமனைகள் இருக்க வேண்டும். அப்போலோ தரத்துக்கு அரசு மருத்துவமனைகளும் இருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தை தான் நான் வெளிப்படுத்துகிறேன். தவிர இதில் அரசியல் இல்லை” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
40 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago