2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

ஒடிசா கலைஞனின் விழிப்புணர்வு தந்திரம்

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 13 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வனத்தில் மரங்கள் வெட்டுவதைத் தடுப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மரங்களில் மோடியின் உருவத்தை ஒடிசா கலைஞர் ஒருவர் வரைந்து வருவது பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.

ஒடிசாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் கலைஞர் சமரேந்திர பெஹெரா. இவர் தனது சித்திரங்கள் மூலம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள சிமிலிபால் தேசிய பூங்காவைச் சேர்ந்த மரங்களில் அண்மைக் காலத்தில் இவர் வரைந்த ஓவியங்கள் ஒடிசா மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. சிமிலிபால் வனத்துக்குள்ளும் வெளியேயும் உள்ள மரங்களில் இவர் பல்வேறு சித்திரங்களை வரைந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .