2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கடத்தப்பட்ட மலைப்பாம்பு குட்டிகள், அணில் சிக்கின

Freelancer   / 2023 செப்டெம்பர் 14 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னைக்கு தாய் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த 35 வயது மதிக்கத்தக்க ஆண் பயணி ஒருவர் வைத்து இருந்த 2 பிளாஸ்டிக் கூடைகளில் இருந்து,  அரியவகை மலை பாம்பு குட்டிகள் 15 மற்றும் அணில் ஒன்றும் சென்னை  விமானநிலையத்தில்
மீட்கப்பட்டன.

எந்த விதமான சான்றிதழும் இல்லாமல் அவற்றை கொண்டு வந்த அந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர் தொடர்ந்து, பெசன்ட் நகரில் உள்ள வனவிலங்கு பாதுகாப்புப் குற்றப்பிரிவு பொலிஸார்  ஆய்வு செய்தனர். அப்போது அந்த கூடைகளில் இருந்தவை பால் பைத்தான் என்னும் அரியவகையைச் சேர்ந்த மலைப்பாம்புகள் என்பது தெரியவந்தது.

மேலும் இவற்றுடன் ஆப்ரிக்க கண்டத்து அணிலும் பறிமுதல் செய்யப்பட்டது.  இவ்வகை பாம்புகள் தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்டு, பெரும் பணக்காரர்களின் வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்க விற்பனை செய்யப்படுகின்றன. இதனை தொடர்ந்து, 15 அரிய உயிரினங்களையும் மீண்டும் தாய்லாந்திற்கே  அனுப்பி வைக்க சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X