2024 செப்டெம்பர் 14, சனிக்கிழமை

காதலுக்கு மரியாதை கொடுத்த மகள்

Editorial   / 2024 ஜூலை 10 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது மகள் சொல் பேச்சை கேட்காமல் காதலனை திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்த தந்தை தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

தனது மகள் தன் சொல் பேச்சை கேட்காமல் காதலுடன் சென்றதால் விரக்தியடைந்த தந்தை, தனக்கு தானே தண்டனை கொடுத்த சம்பவம் கன்னியாகுமரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஆரல்வாய்மொழியை சேர்ந்தவர் சுந்தர். 50 வயதான இவர் ஆரல்வாய்மொழியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வந்தார். பிறகு, சவுதி அரேபியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சேர்ந்து தற்போது அங்கு பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சுபாவும், 19 வயதில் ஒரு மகளும் சொந்த ஊரில் இருந்து வந்தனர். அவர்களின் மகள் அங்குள்ள கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இதனிடையே, அவரது மகள் தனது கல்லூரியில் பயிலும் சீனியர் மாணவனை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் அவரது வீட்டிற்கு தெரிய வரவே, சுந்தர் கொதித்து போய் உள்ளார். "நமது குடும்பத்திற்கு இந்த காதல் எல்லாம் செட் ஆகாது.. படிப்பில் கவனம் செலுத்து" என சுந்தர் சொல்லி இருக்கிறார். ஆனாலும் அவரது மகள் காதலை கைவிடவில்லை. வீட்டிற்கு தெரியாமல் காதலை தொடர்ந்து வந்திருக்கிறார்.

இந்நிலையில், படிப்பு முடிந்த நிலையில், அவரது மகள் காதலனுடன் ஓடிச்சென்று திருமணம் செய்து கொண்டார். இந்த விஷயம் தெரியவந்ததும், உடனடியாக சுந்தர் வெளிநாட்டில் இருந்து புறப்பட்டு சொந்த ஊர் வந்தார். அனைத்தும் தன் கைமீறி போய்விட்டதை உணர்ந்த அவர், யாரிடமும் எதுவும் பேசாமல் இருந்தார். எனினும் திருமணத்தை ஏற்றுக் கொண்டார்.

இந்நிலையில்,  இரவு பாத்ரூமுக்கு சென்ற அவர், நீண்டநேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி, பாத்ரூமை தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து, உறவினர்களுக்கு அவர் தெரிவித்தார். பின்னர், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற போது, அங்கு கழுத்தில் இருந்து ரத்தம் ஆறாக ஓட மயங்கி விழுந்து கிடந்தார் சுந்தர். பின்னர் சுந்தரை மருத்துவமனைக்கு அவர்கள் தூக்கிச் சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மகள் தன்னை மதிக்காமல் காதலனை திருமணம் செய்துகொண்டதால் மனமுடைந்த சுந்தர் தன்னுயிரை மாய்த்து கொண்டதாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .