Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Ilango Bharathy / 2023 மார்ச் 14 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
மணிமங்கலம் பகுதியில் காதலர்களை மிரட்டி பொலிஸார் பணம் பறித்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த மணிமங்கலம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுவந்த இரு பொலிஸ் அதிகாரிகளே இவ்வாறு காதலர்களைக் குறிவைத்து பணம் பறித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரிகளால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணன் என்பவர் இது குறித்து அளித்த புகாரின் அடிப்படையிலேயே இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கிருஷ்ணன் கொடுத்த புகாரில் ”நானும், நான் திருமணம் செய்யவுள்ள பெண்ணும் அண்மையில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது அவ்வழியாக வந்த பொலிஸார் எங்கள் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறியதோடு, எங்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்க வேண்டும் என்றும் மிரட்டும் தொணியில் பேசினர்.
இன்னும் சில தினங்களில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் பொலிஸ் நிலையத்திற்கெல்லாம் வேண்டாம் எனக் கூறினோம். அதற்கு அவர்கள் 10,000 ரூபாய் கொடுத்தால் விட்டு விடுவதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆனால் எங்களிடம் 4 000ரூபாய் தான் உள்ளது எனத் தெரிவித்ததால், ஜி.பே மூலம் குறித்த பணத்தை லஞ்சமாக பெற்றுவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர்” இவ்வாறு குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த அதிகாரிகள் இருவர் மீதும் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
25 minute ago
1 hours ago
3 hours ago