Freelancer / 2024 மே 15 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்நிய பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (13) நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில், திருப்பதியில் உள்ள தொட்டாபுரம் வாக்குச்சாவடியில் இரு இளைஞர்கள் வாக்களிக்க வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களை கண்டு சந்தேகமடைந்த பாதுகாப்பு படை வீரர்கள், அவர்களை அழைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், அவர்களை நடுரோட்டில் மண்டியிட வைத்து கைகளை மேலே உயர்த்த சொல்லி தடியால் அடித்து விசாரித்தனர்.
அதில், தாங்கள் கள்ள ஓட்டு போட வந்ததை குறித்த இளைஞர்கள் ஒப்புக்கொண்டனர். அதன் பிறகு, அவர்களை பாதுகாப்புப் படை வீரர்கள் எச்சரித்து அனுப்பினர்.
இது தொடர்பான காணொளி காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.S
3 minute ago
11 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
11 minute ago
35 minute ago