Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 செப்டெம்பர் 08 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
போபால்
இந்தியா மத்திய பிரதேசம் மாநில, புதல்கண்ட் பகுதியில் வரட்சியான கால நிலைகாரணமாக மழை பெய்யவில்லை. இதனால், ஒரு கிராமத்தில், மழை வேண்டி சிறுமிகளை நிர்வாணமாக்கி, அவர்களின் கழுத்தில் தவளையை மாலையாக கட்டி ஊர்வலம் அழைத்துச் சென்றுள்ளனர். இது குறித்து பொலிஸாரும் குழந்தை உரிமைகள் ஆணையமும் விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி கண்டனத்தையும் பெற்றுள்ளது. 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளை இந்தச் சடங்குக்காக பயன்படுத்தியுள்ளனர். இந்த சடங்கின் மூலம் மழைக் கடவுள் சமாதானமடைந்து மழை தருவார் என அந்த ஊர் மக்கள் நம்புகிறார்கள்.
சிறுமிகள் முன்னால் செல்ல அந்த ஊர் பெண்களும் பாடல் பாடியபடி அவர்களை பின் தொடர்கிறார்கள்.
கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் நின்று சிறுமிகள் உணவு தானியங்களை சேகரித்தனர். இறுதியாக அவற்றை உள்ளூர் கோவிலின் சமுதாய சமையலறைக்கு நன்கொடையாக வழங்கினர். இந்த சடங்கிற்கு சிறுமிகளின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்து உடன் பங்கேற்றதாக மாவட்ட ஆட்சியர் கூறினார்.
தேசிய குழந்தை உரிமைகள் ஆணையம் இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை கேட்டுள்ளது. “இந்த நிகழ்வுக்கு எதிராக யாரும் இதுவரை புகாரளிக்கவில்லை என்றும், இருப்பினும் சிறுமிகளை கட்டாயப்படுத்தியிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மாவட்ட எஸ்.பி., கூறியுள்ளார்.
7 minute ago
13 minute ago
16 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago
16 minute ago
53 minute ago