Freelancer / 2025 பெப்ரவரி 13 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேரள கடலோர மற்றும் வனப்பகுதிகளை சுற்றியுள்ள சமூகங்களை பாதுகாக்கக் கோரி, பாராளுமன்ற வளாகத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள், இன்று (13) போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
'வயநாட்டில் வனவிலங்குகளால் இதுவரை 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது மிகவும் கவலைக்குரிய ஒரு சூழ்நிலை . இந்த பிரச்சினையை சரிசெய்ய மத்திய அரசும் மாநில அரசும் வயநாடு தொகுதிக்கு நிதி வழங்க வேண்டும். இந்த பிரச்சினையை மக்களவையில் இன்று எழுப்புவேன் என்று நம்புகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
8 hours ago
8 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
15 Dec 2025