A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 10 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெங்களூர்;
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவரும் கர்நாடக மாநில பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.
சசிகலா சிறைக்கு வந்த புதிதில் மனவருத்தத்துடன் யாருடனும் பேசாமல் ஒதுங்கி இருந்தார். நாளடைவில் இயல்பு நிலைக்கு திரும்பிய அவர் சிறை ஊழியர்கள், சக கைதிகளுடன் சகஜமாக பழகினார்.
கல்வி கற்காத கைதிகளுக்கு கல்வி கற்பிக்க ஆசிரியர்கள், சிறைக்கு வருவார்கள். அவர்களிடம் கன்னடம் எழுதுவது, படிப்பதை கற்ற சசிகலா, அதன் மூலம் கன்னட மொழித் தேர்வில் 3ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.
இவர், சிறை அறை ஒன்றில், சிறியதொட்டிகளில் காளான் வளர்த்துள்ளார். தோட்டத்தில் தர்ப்பூசணி வளர்த்து, பணமும் சேர்த்துள்ளார். இதே சிறையில் உள்ள அவரது உறவினர் இளரவசியும் கன்னட மொழி கற்றுள்ளார்.
விடுமுறை மற்றும் நன்னடத்தை காரணமாக சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவார் என்று அவரது வக்கீல்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கர்நாடக மாநில சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்படி சசிகலாவுக்கு விடுமுறை கிடையாது என்றும் நன்னடத்தையின் காரணமாக அவரை முன் கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்பதை சிறைத்துறை தெரிவித்தது. சசிகலா ஜனவரி மாதம் 27ஆம் திகதி விடுதலையாவார் என்றும் சிறைத்துறை தெரிவித் துள்ளது.
சசிகலா,இளவரசி,சுதாகரன் ஆகிய மூவருக்கும், அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆண்டுகள் தண்டனை காலம் முடிவடைகிறது.
சசிகலா, இளவரசி இருவரும் விசாரணைக் கைதியாக 33 நாள்கள் சிறையிலிருந்தார்கள். அந்த 33 நாள்கள் மற்றும் சசிகலா 2 முறை பரோலில் சென்ற 17 நாள்கள் கழித்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதி விடுதலையாக வாய்ப்பு உள்ளது என்கின்றன சிறைத்துறை வட்டாரங்கள்.
அதேவேளையில், இளவரசி 5 நாள் பரோலில் வந்ததைக் கழித்தால், பொங்கலுக்கு முன்பு விடுதலை ஆவதற்கான வாய்ப்புகளும், சுதாகரன் சுமார் 4 மாதம் காலம் சிறையிலிருந்ததைக் கழித்தால் இந்த மாதத்திலும் விடுதலை ஆக வாய்ப்பு உள்ளது.
எனினும் சுதாகரன் அபராத தொகை கட்டியது தாமதமானதால் அவரது விடுதலை தாமதமாக ஜனவரி முதல் வாரத்தில் இருக்கும் என்கின்றன சிறைத்துறை வட்டாரங்கள். இதன் மூலம் சசிகலாவுக்கு முன்பாக சுதாகரன், இளவரசி விடுதலை ஆகி விடுவார்கள் என்பது உறுதியாகி உள்ளது.
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
2 hours ago