Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஒக்டோபர் 31 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இதற்கிடையே, விஜயவாடா ஊழல் ஒழிப்பு நீதிமன்ற நீதிபதிக்கு சிறையில் இருந்து சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “சிறையில் இருக்கும் எனக்கும், வெளியில் இருக்கும் என் குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. அதனால் ராஜமுந்திரி மத்திய சிறைக்கு உள்ளேயும், சிறைக்கு வெளியேயும் இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கவேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
மேலும் இந்த வழக்கில் பிணை வழங்க கோரி சந்திரபாபு நாயுடு ஆந்திரா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த ஆந்திரா உயர் நீதிமன்றம் சந்திரபாபு நாயுடுவுக்கு 4 வார காலம் பிணை வழங்கியுள்ளது.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago