A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 22 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி
உத்தரப்பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்தர மோடி டிசம்பர் 22ஆம் திகதி இன்று கலந்துகொள்கிறார். இந்நிகழ்ச்சியை விமர்சித்தும், ஆதரித்தும் கருத்துக்கள் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
நூறு ஆண்டுகள் நிறைவு செய்வதை முன்னிட்டு அதன் நூற்றாண்டு விழா இன்று இணையதளம் வாயிலாக நடைபெறுகிறது. இதன் முக்கிய விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
இவருடன் சிறப்பு விருந்தினராக மத்திய கல்வித்துறை அமைச்சரான ரமேஷ் பொக்ரியால் நிஷாங்கும் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இவர்கள் பங்கு பெறுவதன் மீது ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இது குறித்து ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் இதன் வரலாற்றுத்துறையின் தகைசால் பேராசிரியரும் உலகப் புகழ்பெற்றவருமான இர்பான் ஹபீப் கூறும்போது, ‘நாட்டின் பிரதமரான மோடி இப்பல்கலைக்கழக விழாவுக்கு வருவது முக்கியமல்ல.இங்கு கல்வியாளர்களும் அறிஞர்களும் வருவது தான் முக்கியம். குறிப்பாக பிரதமர் மோடி, பண்டையக் கலாசாரம் மீது, நம் நாட்டை தவறாக வழிநடத்துகிறார்.
உ.பி. அரசின் லவ் ஜிகாத் சட்டத்தை பார்த்து பொறுத்துக் கொண்டிருக்கும் பிரதமரை இவ்விழாவுக்கு அழைத்தது இப்பல்கலைகழக துணைவேந்தரின் தனிப்பட்ட முடிவாகும்.’ எனத் தெரிவித்தார்.
11 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago
1 hours ago