A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 11 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை சித்ராவின் மரணம் குறித்து உண்மை வெளியே வரவேண்டும் என ஹேம்நாத்தின் பெற்றோர் கூறியுள்ளார்கள்.
சின்னத்திரை நடிகை சித்ரா, சென்னை அருகே நசரத்பேட்டையிலுள்ள தனியார் திரைப்பட நகரில் நடைபெற்ற தொலைக்காட்சித் தொடர்படப் பிடிப்பில் பங்கேற்று, நடித்து வந்தார். இதற்காக அதன் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் தனது கணவர் ஹேமநாத்துடன் தங்கியிருந்தார்.
அதேபோல சித்ராவுக்கும், அவரது கணவர் ஹேம்நாத்துக்கும் இடையே சில நாள்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதும், அதன் காரணமாக இருவரு க்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சித்ரா செவ்வாய்க்கிழமை இரவு முழுதும் செல்லிடப்பேசியில் அதிகமாக பேசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சித்ரா செல்லிடப்பேசி தொடர்புகளையும் சைபர் குற்றப்பிரிவு ஆய்வு செய்து வருகின்றனர்.
ஹேம்நாத்தின் பெற்றோர் ரவிச்சந்திரன், வசந்தா ஆகிய இருவரும் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சொந்த மகளை இழந்த மனநிலையில் நாங்கள் இருக்கிறோம். அவர்கள் தரப்பில் நிறைய பேசிவிட்டார்கள். இதெல்லாம் மனத்துக்குக் கஷ்டமாக உள்ளது. நாங்கள் எதுவும் எதிர்பார்க்கவில்லை. நடிப்பதற்கு இஷ்டம் இருந்தால் தொடர்ந்து நடி, இல்லாவிட்டால் விட்டுவிடு என்றுதான் சொன்னோம். ஹேம்நாத் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது.
பணத்துக்காக சித்ராவைத் திருமணம் செய்ததாகக் கூறுகிறார்கள். நாங்கள் பணத்துக்காக சித்ராவைத் திருமணம் செய்யவில்லை. வரதட்சணை கொடுங்கள், எவ்வளவு நகை போடுகிறீர்கள் என்றும் நாங்கள் கேட்கவேயில்லை.
சித்ராவைக் கொலை செய்யவில்லை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது ஆறுதலானது. சித்ரா மரணம் குறித்து உண்மை வெளியே வரவேண்டும். நாங்கள் ஒத்துழைப்பு கொடுப்போம். சித்ராவின் மரணத்துக்கு எங்கள் மகன் காரணம் அல்ல என்றார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .