A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 24 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை,
ரஜினிகாந்த் தர்பார் படத்துக்கு பிறகு சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.
ரஜினிகாந்த் பொங்கலுக்கு பிறகு தனி கட்சி தொடங்க வசதியாக அடுத்த மாதம் 12ஆம் திகதிக்குள் சம்பந்தப் பட்ட அனைத்து காட்சிகளையும் படமாக்கி முடித்து விட திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் எதிர்பாராத விதமாக அண்ணாத்த படப்பிடிப்புக்குள் கொரோனா நுழைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன.
அப்போது படக்குழுவை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
ரஜினிகாந்துக்கும், மற்ற படக்குழுவினருக்கும் பரிசோதனையில் தொற்று இல்லை என்று தெரிய வந்தது. பாதுகாப்பை கருதி அண்ணாத்த படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
ரஜினிகாந்துக்கு தொற்று இல்லை என்றாலும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். இதர நடிகர், நடிகைகளும் தனிமைப்படுத்திக்கொண்டனர். படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார்.
21 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago
1 hours ago