2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

தமிழகத்திலிருந்து சபரிமலை செல்வோருக்கு அறிவுறுத்தல்

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 22 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

 தரிசன நேரத்துக்கு முன்னதாக 24 மணி நேரத்துக்குள் பெறப்பட்ட கொரோனா தொற்றின்மைச் சான்று முன்பதிவுக்கு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணல் இருப்பவர்கள் பயணத்தை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பயணத்தின் போது முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். நெய் அபிஷேகம் செய்யவும், பம்பை ஆற்றில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வறுமைக்கோட்டுக்கு கீழுள்ளோருக்கான அட்டை, ஆயுஸ்மான் பாரத் அட்டை போன்றவற்றை வைத்துள்ள வர்கள், தங்கள் பயணத்தின்போது அவற்றை உடன் கொண்டுவர வேண்டும்.

சன்னிதானம் பம்பா மற்றும் கணபதி கோவில் ஆகிய இடங்களில் இரவு தங்கவும் அனுமதியில்லை.  எருமேலி, வடசேரிக்கரா ஆகிய இரண்டு வழிகளில் மட்டுமே தமிழக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப் பட்டு உள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .