A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 15 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற திட்டத்தை மக்கள் நீதி மய்யம் செயல்படுத்தும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாணவர்கள் மற்றும் பெண்களுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது.
இதில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது: சாதனை என்ற பெயருக்கு அடையாளம் அம்மா. வீடுகளில் அனைத்து வேலைகளையும் முன்னின்று செய்வது பெண்கள். ஆனால், அதற்கு உரிய மரியாதை அவர்களுக்கு கிடைப்பதில்லை. இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற கருத்து மேலைநாடுகளில் பேசப்பட்டு வருகிறது. அதை மக்கள் நீதி மய்யம் செயல்படுத்தும்.
விவசாய குடும்பத்தில் உள்ள பெண்களும் விவசாயிகளே. அதற்கான அங்கிகாரம் மற்றும் சான்று அளிக்க சட்டமியற்றப்படும். கடந்த 1957 இல் காமராஜர் அமைச்சரவையில் ஒரு பெண் அமைச்சர் இடம் பெற்றார். அதையடுத்து 63 ஆண்டுகளைக் கடந்தும் தற்போதைய அமைச்சரவையில் 4 பெண்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் ஆண்களை விட, அதிமாக உள்ள பெண் வாக்காளர்களே ஆட்சிப் பொறுப்பை யாருக்கு கொடுப்பது என்பதை தீர்மானிப்பர் என்றும் தெரிவித்தார்.
4 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
14 minute ago