A.K.M. Ramzy / 2021 மார்ச் 17 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவு தொடங்கியிருப்பது அதிர்ச்சியளி க்கிறது என்று பா.ம.க. நிறுவனர் டொக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டொக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கிட்டத்தட்ட கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது என்று அனைத்து தரப்பினரும் நிம்மதி பெருமூச்சு விட்டுவந்த நிலையில், கொரோனா வைரஸ் மீண்டும் மிகவேகமாக பரவ தொடங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
பள்ளி மாணவர்களுக்கு அதிகளவில் கொரோனா ஏற்பட்டுள்ள நிலையில், உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
கொரோனா வைரஸ் பரவல் ஓய்ந்துவிட்டதாக மக்கள் தங்களுக்குத் தாங்களே நினைத்துக்கொள்வதும், வீட்டைவிட்டு வெளியில் வரும்போது முகக் கவசம் அணிவதை கௌரவக் குறைவாகவும், வசதி குறைவாகவும் நினைப்பதுதான் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதற்கு காரணமாகும்.
வெளியில் வரும் போது முகக்கவசம் அணிவது, கையுறைகளை அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை நன்றாக கழுவுவது, கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு விதிகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும்.
தடுப்பூசி குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருவதில்லை.
எனவே, இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்து வதுடன், வயது வரம்பின்றி அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட, மத்திய அரசின் ஒப்புதல் பெற்று, தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு டொக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago