A.K.M. Ramzy / 2021 ஜூன் 22 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

சென்னை :
தமிழகத்தில் கொரோனா தொற்று தாக்கம் குறைந்துள்ளதால் பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்து செல்லும் விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் சென்னை உட்பட தமிழகம் முழுதும் கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், விமான பயணிகள் எண்ணிக்கை சரிந்து விமானங்களின் இயக்கமும் 100க்கு கீழ் குறைந்தன. தமிழகத்தில் தற்போது கொரோனா தாக்கம் குறைந்து காணப்படுகிறது.
இதனால், நேற்று பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து டெல்லி, ஐதராபாத், மும்பை, மதுரை, திருச்சி, கோவை, பெங்களூர், அந்தமான் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு கூடுதல் விமானங்கள் சேவையிலுள்ளன.'விமான சேவை வரும் வாரங்களில் மேலும் அதிகரிக்கும்' என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
54 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
59 minute ago