2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

தமிழில் தயாராகும் பிரதமர் மோடியின் ஹிந்தி நூல்

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 27 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி

பிரதமர் நரேந்திர மோடியின் ‘சாட்சே’ என்ற ஹிந்தி நூல் விரைவில் தமிழில் வெளியாகிறது. “அன்னையின் திருவடிகளுக்கு…’ என்ற பெயரில்  வெளியிடுகிறது.
பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் தொண்டராக இருந்தபோது,  சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கடந்த 1986 முதல்குறிப்புகளை எழுதி வந்துள் ளார். லோக மாதா, ஜெகத் மாதா, ஜெகத் ஜனனி, ஜெகதாம்பா என கடவுளிடம் முறையிடுவது போல் இவற்றை மோடி எழுதியுள்ளார்.
இவற்றை அவருடன் தங்கிப் பணியாற்றிய நெருங்கிய நண்பர் நரேந்தரபாயீ பஞ்சஸாராபடித்து வியந்துள்ளார். குஜராத்தியான அவர், மோடி எழுதியதைப் பத்திரப்படுத்தி வைக்குமாறும் வேண்டியுள்ளார். இதை மற்றொரு குஜராத்தியான சுரேஷ்பாயீ தலால் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். மோடி பிரதமரான பிறகு சமூக வளர்ச்சிக்கான அவரது கருத்துகளை நூலாக வெளியிடும் பணியில் சுரேஷ் பாயீ இறங்கினார். ஆனால், அப்பணி முடியும் முன் அவர் இறந்ததால் அவரது குடும்பத்தினர் அந்நூலை ஹிந்தியில் ‘சாட்சே’ (சாட்சியம்) என்ற பெயரில் 2020இல் வெளியிட்டுள்ள னர்.
‘அன்னையின் திருவடிகளுக்கு…’ என்று பெயரிடப்பட்ட அந்நூலை தமிழ் மற்றும் ஹிந்தி மொழி அறிஞரான டொக்டர் எம்.கோவிந்தராஜன் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .