A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 14 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் தலித் மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் நேற்று இணைய வழியில் நடை பெற்றது.
அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மதவாத, பிரிவினைவாத சக்திகளைத் தடுக்க வேண்டும்.
தமிழகத்தில் காலூன்றுவதற்காக பாஜகவும் சங்கப் பரிவாரங்களும் கடுமையான முயற்சிகளைச் செய்து வருகின்றன. ஆட்சியில் உள்ளவர்களோடு சேர்ந்து கொண்டு பல்வேறு சதித் திட்டங்களை தீட்டி வருகின்றன. சமூக நீதி மண்ணான தமிழகத்தைப் பாதுகாக்க வேண்டிய வரலாற்றுக் கடமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இருக்கிறது.
எனவே, மதவாத, சமூகப் பிரிவினைவாத சனாதன சக்திகளைத் தமிழகத்தில் காலூன்ற விடாமல் தடுக்கும் வகையில், உரிய செயல் திட்டங்களையும் தேர்தல் வியூகங்களையும் வகுத்திட வேண்டும்.
இவ்வாறு மேலும் பல தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டன.
5 minute ago
10 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 minute ago
15 minute ago