A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 24 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருவனந்தபுரம்:
கேரளத்தில் 28 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாஸ்திரீ அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில், கிறிஸ்தவ பாதிரியாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் மற்றொரு கன்னியாஸ்திரீக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்றுமுன்தினம் தீர்ப்பளித்தது.
அபாய கொலை வழக்கில் பலம்மிக்க குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்த முடியாமல் பல முறை பொலிஸார் தோல்வியைத் தழுவினர். ஆனால், 'நீதி நிச்சயம் வெல்லும்' என்பதை உறுதி செய்யும் வகையில் ஒரு திருடனின் வாக்குமூலம், குற்றவாளிகள் இருவரையும் நீதியின்முன் நிறுத்த உதவியது.
1992ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் திகதி நள்ளிரவில் அடக்கா ராஜு என்ற திருடன், கோட்டயத்தில் உள்ள புனித பயஸ் கொன்வென்ட்டுக்குள் சுவர் மீதேறிக் குதித்து நுழைந்தான். அங்கிருந்த மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டு கட்டடத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில், நுழைய காத்திருந்த போது, பின்பக்க படிக்கட்டில் இரண்டு பேர் ஏறிக் கொண்டிருப்பதைப் பார்த்தான் திருடன்.
அதன்பிறகுதான், செய்தித்தாள்கள் வழியாக, இவ்விருவரும் ஒரு கன்னியாஸ்திரீ பெண்ணைக் கொலை செய்த குற்றவாளிகள் என்பதும், அந்த கொலை நடந்த அன்றுதான் தான் அந்த பள்ளி வளாகத்துக்குள் திருடச் சென்றதும் தெரிய வந்தது.
உடனடியாக தான் அன்று பார்த்ததை பொலிஸிடம் கூறி குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்றுத் தர உதவினார். ஆனால், வாக்குமூலத்தை மாற்றிச் சொல்லும்படி, துன்புறுத்தல் முதல் கோடிக்கணக்கான பணம் வரை பேரம் பேசப்பட்டது.
ஆனால், எதற்கும் அசராத ராஜூ(திருடன்), தனது வாக்குமூலத்தை ஒவ்வொரு முறை நீதிமன்றப் படிக்கட்டுகளை ஏறும் போதும் ஒரு வார்த்தையும் மாறாமல் கூறினார்.
அவரது அந்த ஒற்றை வாக்குமூலம், பல வகைகளில் மறுக்கப்பட்டும், நீதியை அபயாவுக்குப் பெற்றுக் கொடுத்தது.
தான் சொன்ன அந்த வாக்குமூலத்தை கடைசி வரை உண்மையாகவே வைத்திருந்ததால், தற்போது வெறும் மூன்று சென்ட் நிலத்தில் வாழ்ந்து வருகிறார் அந்த நல்ல திருடன்.
15 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
1 hours ago