A.K.M. Ramzy / 2020 நவம்பர் 24 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆலந்தூர்,
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று செவ்வாய்க் கிழமை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய திருப்பதி செல்கிறார். இதற்காக காலை 6.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, காலை 9.15 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வந்து சேருகிறார்.
அவர்,இன்றுகாலை 9.45 மணிக்கு சென்னையில் இருந்து இராணுவ ஹெலிகாப்டரில் திருப்பதிக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு சாமி தரிசனம் முடிந்து, திருப்பதியில் இருந்து இராணுவ ஹெலிகாப்டரில் மீண்டும் மாலை 5.35 மணிக்கு சென்னை வருகிறார்.
அப்போது அவரை வரவேற்று, வழியனுப்பி வைக்கப்படுகிறது. மாலை 5.45 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானத்தில் மீண்டும் அவர் டெல்லி புறப்பட்டு செல்வார்.
51 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
1 hours ago