A.K.M. Ramzy / 2020 நவம்பர் 22 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் சென்னையில் நடைபெற்று வருகிறது. தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர் அணி மற்றும் முரளி அணிக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து முன்னணி தயாரிப்பாளர் கள் பலரும் பிரிந்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் எனத் தொடங்கி உள்ளனர். இதற்கு பாரதிராஜா தலைவராக இருக்கிறார். இதில் பதவியில் உள்ள நிர்வாகிகள் யாருமே, தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிடவில்லை. இதனால், இந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் பல முன்னணி தயாரிப்பாளர்கள் போட்டியிடவில்லை.
இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, தேனப்பன் பி.எல். ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இதில் பி.எல்.தேனப்பன் மட்டும் எந்தவொரு அணியையும் சாராமல் தனியாகப் போட்டியிடுகிறார்.
இன்றுமாலை 4 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை நாளை 23ஆம் திகதி காலையில் முடிவுகள் அறிவிக்கப்படும்.
51 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
1 hours ago