A.K.M. Ramzy / 2021 மே 19 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

சென்னை:
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என தேமுதிக அறிக்கை வெளியிட்டு உள்ளது.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மூச்சுத்திணறல் காரணத்தால், இன்று அதிகாலை 3.30 மணிக்கு அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக தேமுதிக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தற்போது, விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. மேலும் சிகிச்சை ஓரிரு நாளில் வீடு திரும்புவார். எனவே பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
06 Mar 2026
06 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
06 Mar 2026
06 Mar 2026