Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Mayu / 2023 டிசெம்பர் 27 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை - எண்ணூர் அருகே உள்ள பெரியக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இருந்து வாயுக் கசிவு ஏற்பட்ட நிலையில் அந்தப் பகுதியில் வசித்த மக்கள் மூச்சுத்திணறல் மற்றும் உடல்நல பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கப்பலில் இருந்து தொழிற்சாலைக்கு திரவ அமோனியா கொண்டு வரும் குழாயில் கசிவு ஏற்பட்டதே இதற்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளன.
பெரியக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள தனியார் உரத் தொழிற்சாலையில் இருந்து வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. நேற்று (26) நள்ளிரவு இந்த தொழிற்சாலைக்கு திரவ அமோனியா கொண்டு குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த தொழிற்சாலைக்கு அருகே உள்ள பெரியக்குப்பம், சின்னக்குப்பம், நேதாஜி நகர் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு வாந்தி, கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து உள்ளூர் மக்களே சக மக்களுக்கு தகவல் தெரிவித்து கிராமத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
5 hours ago
5 hours ago