2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

நடுவானில் அரை நிர்வாணம்

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 02 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் அபுதாபியில் இருந்து மும்பை நோக்கிப் பயணித்த டாடாவின் விஸ்தாரா விமானத்தில், இத்தாலியைச் சேர்ந்த பெண்ணொருவர் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ தினத்தன்று எகானமி வகுப்பு பயணச் சீட்டை வைத்திருந்த ‘பாவ்லா பெரூசியோ‘என்ற குறித்த பெண், கூடுதல் வசதி கொண்ட வணிக வகுப்பில் அமரச் சென்றுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் அவரைத்  தடுத்து நிறுத்திய விமானப்  பணியாளரை ‘பெரூசியா‘ தாக்கியதோடு, அருகில் இருந்தவர் மீது துப்பியதாகவும், தனது ஆடைகளைக் களைந்து அரை நிர்வாணமாக நின்று  ரகளை செய்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

 மேலும் இச்சம்பவம் அனைத்தும் விமானம் பறந்துக் கொண்டு இருக்கும் போதே இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் மும்பை பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .